மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி இணைய இதழுக்கு வரவேற்கிறோம் !!
நம் குழந்தைகளிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டுவதே இந்த முயற்சியின் முழு நோக்கம் ஆகும். இதன் மூலம் அவர்கள் தமிழில் சிந்திப்பதும், உரையாடுவதும், உலகோடு தொடர்புகொள்வதும் மேம்படும் என்று நம்புகிறோம்.
நம் குழந்தைகளின் கதைகள் , கவிதைகள் , ஓவியங்கள் , பேச்சுகள் ஆகியவை இவ்விதழில் இடம்பெற உள்ளன.
குழந்தைகளின் இத்தகைய படைப்புகள் உங்களை மகிழ்விக்கும் என்பதில் உறுதி கொள்கிறோம்!
குழந்தைகளே, இந்த இதழ் உங்கள் கதைகள், சிந்தனைகள் மற்றும் படைப்பாற்றலை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான இடமாகும்.
பள்ளியில் உங்கள் அனுபவங்கள், உங்கள் பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான உங்கள் கனவுகள் பற்றி அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து கேட்க விரும்புகிறோம்.
இதழை கண்டுகளிக்க வருகை தந்தமைக்கு நன்றி! நமது இதழை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளுங்கள் !!