படைப்புகளுக்கான அழைப்பு
இளந்தளிர் 2025
படைப்புகளுக்கான அழைப்பு
அன்புள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு,
நமது பள்ளி 2025-ஆம் ஆண்டிற்கான ‘இளந்தளிர்’ இ-பத்திரிகைக்காக மாணவர்களின் படைப்புகளை வரவேற்கிறது. இந்த முயற்சி, நமது மாணவர்களின் தமிழ் மொழித் திறனையும், சொற்களஞ்சியத்தையும் மேம்படுத்துவதோடு, அவர்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளை இந்த முயற்சியில் ஈடுபடுத்தி, அவர்களின் திறமையை வெளிக்கொணர உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
படைப்புகளின் வகைகள்
கட்டுரைகள்
கோடை விடுமுறையில் கற்றுக்கொண்ட புதிய விஷயங்கள்.
பயண அனுபவங்கள்
கோடைக்கால சுற்றுலாப் பயண அனுபவங்கள்.
கவிதைகள்
உங்களுக்குப் பிடித்த எந்த தலைப்பிலும் எழுதலாம்.
புதிர்கள் & விடுகதைகள்
மற்றவர்களை சிந்திக்க வைக்கும் சுவாரசியமான புதிர்கள்.
கடிதங்கள்
குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள்.
உங்கள் திறமை
உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்!
சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள்
மொழி
படைப்புகள் அனைத்தும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தலாம்.
கடைசி தேதி
உங்கள் படைப்புகளை September 30, 2025-க்குள் சமர்ப்பிக்கவும்.
சமர்ப்பிக்கும் முறை
உங்கள் வகுப்புத் தமிழ் ஆசிரியரிடம் நேரடியாகக் கொடுக்கவும் அல்லது articles@ilanthalir.net என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
பெற்றோர்களுக்கான ஒரு வேண்டுகோள்
மாணவர்கள் இந்த முயற்சியில் முழுமையாக ஈடுபட, பெற்றோர்களாகிய உங்கள் ஒத்துழைப்பும், ஊக்கமும் மிகவும் அவசியம். தாங்கள் இதனை ஒரு தனிப்பட்ட பொறுப்பாகக் கருதி, பிள்ளைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவீர்கள் என நம்புகிறோம்.