அன்புள்ள பெற்றோர்களே,
வணக்கம்!
நமது தமிழ்ப் பள்ளியின் இணைய இதழுக்கு, கீழ்காணும் வகைகளில் மாணவர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.
மாணவர்களின் படைப்புகளை articles@ilanthalir.net என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- கவிதை (5 – 100 சொற்கள்)
- கதை (10 – 500 சொற்கள்)
- நாடகம் / உரையாடல் – ஒலி / ஒளி & ஒலி (3 – 7 நிமிடங்கள்)
- கட்டுரை (100 – 500 சொற்கள்)
- கடிதம் (100 – 250 சொற்கள்)(எ.கா: தாத்தா பாட்டி, ஆசிரியர், நூலாசிரியர், கற்பனைக் கதாபாத்திரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நபர்)
- சிறார் செய்யத்தக்க உணவு செய்முறைகள்
- விமர்சனங்கள் (எ.கா: நூல், திரைப்படம், பாடல், கணினி விளையாட்டு)
- பேச்சு அல்லது வாசிப்பு - ஒலி / ஒளி & ஒலி (1 – 5 நிமிடங்கள்)
- ஓவியம் (A4 பக்க அளவு)
விதிமுறைகள்:
- இந்த இதழ் மாணவர்களின் படைப்பாற்றலைத் தூண்டுவதற்கும், மொழிப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளைத் தன்னிச்சையாக தேர்ந்தெடுக்க வேண்டும். (எ.கா: பொம்மைகள், விளையாட்டு, அறிவியல், மொழி, வரலாற்று நபர்கள், போன்றவை)
- மாணவர்கள் திறந்த மனதுடன் அனைத்து விதமான தலைப்புகளையும் அணுகலாம் என்றாலும், இந்த படைப்புகளை இணையத்தில் வெளியிடவுள்ளோம் என்பதால், யார் மனதையும் அல்லது நம்பிக்கைகளையும் அவமதிக்காத தலைப்புகளைப் பெற்றோர்களின் மேற்பார்வையில் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி
பெற்றோர் ஆசிரியர் குழு – மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி